Tuesday, September 8, 2009

பாதச் சுவடுகள்

ரொம்ப நாளாகவே தமிழில் எனக்கென ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கனும்னு ஒரு ஆசை. சரி ... அப்படி ஆரம்பிச்சா அந்த வலைப்பதிவில் என்ன எழுதலாம் என்ற ஒரு கேள்வி எனக்குள் வந்தது. இந்த கேள்விக்கான விடை தான் இந்த "பாதச் சுவடுகள்". நான் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. சில சமயங்களில் அது எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் வருத்தத்தையும் மனக்கசப்பையும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திருக்கிறது. இவையெல்லாம் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் நடந்தவை. அப்படிப் பட்ட மனிதர்களைப் பற்றித்தான் இனி நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். என்னடா இவன் இதைப் பொய் ஒரு பெரிய விஷயமா சொல்றானேன்னு யோசிக்காதீங்க . எனக்கு இது மிகப்பெரிய விஷயம் தான் . இவர்கள் அனைவருமே இது வரை நான் கடந்து வந்த பாதையின் சுவடுகள்... பாதச் சுவடுகள்...

பின் தொடருங்கள்...